Sayings

SAYINGS OF GURUJI

sayings of Guruji Sundar

living enlightened master

God

When I Gazed at the Moon and the sun
I thought that God should be somewhere.
But when I re-turned into myself
I Know that God is Me.

Love

Love is mostly mistaken for lust,
or in other words lust sugar-coated is called love.
But, real love always happens between a master and disciple,
love consumes both the Guru and the sishya and in the end only pure love remains as an entity.

Enlightenment

When I becomes erased totally and only the quality of the pure Essence of the feeling of I remains that state is called ENLIGHTENMENT OF THE AATHMAN

Youth-ness

In a blink of an eye, it appears and vanishes in to a thin air.
So our life also exists in a dream like state.
Youthfulness is not real.
Life is not real.
Only one thing is real.
Only the ever-pervading consciousness of I is real.
It will remain forever and forever.
So tune your awareness to the real I consciousness.
Who ever drinks from this source will never be thirsty.
They will never die!!!.

குருவின் பொன் மொழிகள்

தில்லையில் நடனமிடும் கூத்தனே
எந்தன் அம்பலத்தில் எப்போது
ஆட போகின்றாய்
நான் வழிமேல் விழி வைத்து
காத்து இருக்கின்றேன்
நான் கரைந்த பின் தான் வருவாயா

என்னை பெற்ற அன்னைக்கு தெரியவில்லை
என்னை வளர்த்த தந்தைக்கும் தெரியவில்லை
எனக்கு தொட்டு காட்டிய ஆசானுக்கும் தெரியவில்லை
என்னை பற்றி யாரிடம் போய் இயம்புவேன்

ஊனுக்குள் உறவாய் இருப்பவனே
பூவுக்குள் தேனாய் இருப்பவனே
நாதத்தில் ஒலியாய் இருப்பவனே
உன்னை எங்ஙனம் விளிப்பேன்

(உரைகல்)

நீ இருக்கும் வரை
நான் இருக்கின்றேன்
நீ சென்றதும் நான் இல்லாமல
இருக்கின்றேன்

அவன்

மறைந்தும் வெளிபடுத்துகின்றான்
வெளிபடுத்தும் போது மறைந்துவிடுகின்றான்

தோன்றி மறையும் இவ்வுலகில்
தோற்றமும் முடிவும் இல்லாதவனுக்கு என்ன வேலை

ஞானம்

ஞானம் என்ற விடுதலையை அடைய நான் செய்த முயற்சிகள் எத்தனை!
ஞானம் என்ற ஆன்ம ருசியை அடைய நான் இழந்த இழப்புகள் எத்தனை!
ஞானம் என்ற இறைவனை அடையும் நிலையை அடைய நான் உடலை வருத்திய துயரங்கள் எத்தனை!
ஞானம் என்ற ஞானியின் வசிப்பிடத்தை அடைய நான் இயற்றிய அருந்தவங்கள் எத்தனை!
ஞானம் என்ற வேள்வியில் ‘என்னையே’ புடம் போட்டு அழிவில்லா நிலையை அடைவதற்கு மகான்களிடம் நான் பெற்ற அருட்பிச்சை எத்தனை!

ஞானிகள்

ஞானிகள் இருந்த போது இல்லாமல் இருக்கின்றார்கள். இல்லாத போது எங்கும் நிறைந்து இருக்கின்றார்கள்.

கடவுள்

கடந்து உள்ளே சென்றால் இறைவனை காணலாம்.

குருவின் ஐம் பொன் பாக்கள்

தியானம் என்னும் தீயில் என்னையே பொசுக்கி
அது மட்டும் தனியாக நிற்கிறதே இது என்ன வேள்வி

ஆணும் இல்லை பெண்ணும் இல்லை அலியும் இல்லை
நானும் இல்லை நீயும் இல்லை இது எதில் சேர்த்தி

தான் தானாய் தன்னுள் தனித்திருப்பது தவம்

உன்னுள் உணர்வாய் உறையும் உத்தமனை உணர்

அவன் அவனாய் அவனுள் அவனியில் அமர்ந்திருப்பது அருந்தவம்

என்னை எனக்குள் எடுத்துக்காட்டிய என்தேவனுக்கு என் வணக்கம்

Nirathisaiananda’s Words

நோக்கா நோக்கை நோக்க நோக்க நோக்கா நோக்கும் நோக்கி நோக்கும்

Guru’s Transalation of Nirathisaiananda’s Words

பார்க்காமல் பார்ப்பவனை பார்க்க பார்க்க பார்க்காமல் பார்ப்பவனும் பார்க்கப் படுவானே

அன்பு

அன்பு எனப்படுவது யாதெனில்
அன்பாயிருப்பது அன்பு
அன்பே சிவம் என்பர் சித்தர்
அன்பே அறிவு என்பர் பெரியவர்
அன்பே கடவுள் என்பர் ஞானி
அருந்தவம் இயற்றியவரின் ஆற்றல்
அன்பாக மாறும் மகிமையை உணர்வர்
அன்பை அறியாதவர் அரை மனிதர்
அன்பாயில்லாதவர் ஆன்மாவற்றவர்

பதி, பசு, பாசம்

பதி பசு பாசம் என்னும்
மாயையை விலக்கி நின்றால்
நான் என்னும் ஆதி அந்தமற்ற
இறை என்னும் உணர்வை
உன்னுள் உணர்வாய்