மாலையிட்ட மங்கை கதறி துடிக்க,
சுகம் கண்ட நண்பர்கள் கும்மாளமிட
சுற்றியிருக்கும் சுற்றத்தினர் வெறித்து நோக்க,
நீ மட்டும் உன் முன்னோர்களை சந்திக்க வெகு வேகமாக சென்று விட்டாயே !!!
மகனே வாழ்க்கை என்பது இது அல்ல
நீ வாழ்ந்தது வாழ்க்கையும் அல்ல !!
சற்று கண்ணை அகல விரித்து இருந்தாலே
உன் சுற்றத்தில் என்னையும் பார்த்திருப்பாயே !!
மாயையும் மறையும் உன் அருகிலேயே இருந்தனரே !!!