29/8/2015 – தந்தையின் 11ஆம் ஆண்டு நினைவு நாள்

1. தந்தைக்கு உபதேசித்த முருக கடவுளை போல, நானும் என் தந்தைக்கு பிறவா வரம் வாங்கி தந்திருக்கின்றேன்! எல்லாம் வல்ல என் குரு லிங்கத்தின் அருளாலே!!
இதில் எனது பங்கு என்று எதுவும் இல்லை எல்லாம் என் ஐயன் இட்ட அருள் பிச்சை!!

2. என் ஐயன் இட்ட தீ மூலாதாரத்தில் எழும்பி ஆறாதாரத்திலும் கொழுந்து விட்டு எரியுதடி என் அருள் தாயே!

3. மூலக் கனலில் மூழ்கி கிடந்த நான் இப்போது அருள் ஜோதியில் அகமகிழ்ந்து நிற்கின்றேனே!

4. என்னை எனக்கு தெரியாத்திருந்த போது எனது என்ற எக்காளத்தில் இருந்தேன்.

என்னை எனக்கு தெரிந்த பின் எல்லாம் என் ஈசன் என்று தெளிவு பெற்று என்னுள் ஆழ்ந்திருந்தேனே!!

குருவின் பொன் மொழிகள்

  1. உனக்கு (இருதயத்திற்க்கு) எப்போதும் உண்மையாக இரு!
  2. உனது மனதின் சகல குணாதிசயங்களையும் ஆராய்ந்து அறிவாயாக!
  3. நீ உனது மனதின் அனைத்து குப்பைகளையும் அகற்றினால் தான் உன் உண்மை நிலை வெளிப்படும்.
  4. உன் சுய சொரூபத்தை மாயை என்னும் அறியாமை மறைத்திருப்பதால் உன்னை நீ சாதாரண மனிதனாக நினைத்து கொண்டு இருக்கின்றாய்.
  5. நம்முடைய எல்லா பாவங்களையும் நம் தவாக்னியால் எரித்து சாம்பலாக்கி விடலாம்.
  6. கர்மக்கள் தீவிர தவ சாதனை செய்பவரை தீண்டாது!!
  7. தவ சாதனையே நமக்கு ஞானத்தின் நுழைவாயிலாகும் !!
  8. உனது மனதில் எழும் அத்தனை எண்ணங்களும் உனக்கு சொந்தமானவை அல்ல !! பின் ஏன் நாம் நமது அனைத்து எண்ணங்களுடனும் போராட வேண்டும்.
  9. குருநாதரின் ஆத்ம விழிப்புணர்வு சபை உங்களுக்காகவே திறக்கப்பட்டதாகும்.
  10. அதனை வளர வைக்க வேண்டியது உங்களின் அனைவரின் பொறுப்பாகும். சபை உங்களுக்கு என்ன செய்தது என்று கேட்பதை போல நீங்கள் சபை வளர என்ன செய்தீர்கள் என்று உங்களை கேட்டு கொள்ளுங்கள்.
  11. ஆத்ம விழிப்புணர்வு சபை உங்களின் தீராத பிறவி நோய்க்கு அரு மருந்தாகும். சபையை வளர்ப்போம் மேம்படுவோமாக !!

ஆஞ்சநேயர் துதி

1.   நினைத்த நேரத்தில்,

நினைத்த இடத்தில்

நிலைக்க கூடிய மாருதியே

எனக்காக பல முறை

இறங்கி வந்திருக்கின்றாய்?

எனக்கு அத்தனை தகுதி

இருக்கின்றதா, இது பலமுறை

என்னுள் எழும் கேள்வி!

 

2. உன்னை வணங்கும் போது

என் நெஞ்சு புடைக்கின்றது ..

எத்தனை கழ்டங்கள் இருந்தாலும்

அது தவிடு பொடியாகின்றது

இது என் அனுபவம்!

 

3. மாருதியே நீ எனக்காக

இறங்கி வரும் போது

எப்போதுமே வாணர

வீரனை போல குதித்து

தான் வருகின்றாய்!

உன் வேகம் என்னை

வியக்க வைக்கின்றது !!

காமாட்சி – 0708/2015

என் தலைவி  காமாட்சியே

நான் உன்னிடம் வருவதே

என்னை முழுமையாக

இழப்பதற்க்கு தான் !!!

தாயே நான் வெற்று

காகிதம் ஆகிவிட்டேன்

நீ வந்து என்னை ஆட்சி

செய்! நான் கரைந்ததே

நீ வருவதற்கு தான் !!!

வேறு எதற்கு தாயே!!!

 

Guruji’s Message – 07/08/2015

DIE YOGI, DIE

DIE THE DEATH

THAT ALL YOGIS DIED,

IF YOU DIE ONLY,

YOU WILL FIND

THE DEATHLESS ONE..

 

PHYSICAL DEATH IS

NOTHING COMPARED

TO SPIRITUAL DEATH

YOU WILL BE

LIGHTING YOUR

OWN FUNERAL PYRE..

MY DEAR YOGI

DIE LIKE ME!!!

குருஜியின் ஞான வெளிப்பாடுகள்

எங்கும் வியாபித்து இருக்கும் இறையை முழுமையாக மறைத்த இறைவா!!

ஞானிகளுக்கும், ரிஷிகளுக்கும், மகான்களுக்கும் மட்டும் ஏன் இறையை உணர்த்துகின்றாய்!!

ஏன் இந்த பாரபட்சம், மக்கள் எல்லோரையும் இறை நிலையை, மாயையை விளக்கி உணர்த்த வேண்டியது தானே!!

அப்போது இப்பூவுலகம் இன்னும் அழகாக இருக்குமே !!

Guruji’s Message – 06/08/2015

KNOCK AND THE DOORS WILL OPEN – JESUS

THERE IS NO NEED TO KNOCK, THE DOOR IS ALREADY OPEN – OSHO

 

IN FACT THERE IS NO DOOR. THERE IS NOWHERE TO GO, YOU JUST SETTLE IN TO YOUR SELF,

AND THERE HE IS – GURUJI SUNDAR

After Enlightenment

Everybody thinks that after enlightenment, our whole life will be peaceful and joyful. No, after enlightenment the anguish and suffering is more because you will be the witness for many people suffering and toiling so much. Without knowing who they are, your heart will ache so much to help them out to cross the shore.

But, they will never trust you, they always think that you are one among them.

Only ‘chosen few’ know that you ceased to ‘exist’ long long ago…

Guruji’s Message – 05/08/2015

If you want to go super fast in the way of self realization, you have to travel on both the paths.  One leg on the path of Jnana and one leg on the path of bhakti. That is how I reached.

காஞ்சி காமாட்சியின் அருள்

  1. கற்ற கலைகள் பல ஆயினும் எவையும் நம்மை காக்காது. கலைகளுக்கெல்லாம் கர்த்தாவாகிய காஞ்சி காமாட்சியின் திருப்பாதம் சரண் அடைவதே உய்வதற்க்கு ஒரே வழியாகும்.
  2. எத்தனை முறை சென்று தரிசித்தாலும், திகட்டாத தெவிட்டாத தேனமுது அவள்.
  3. இன்னும் ஈராயிரம் பிறவிகள் எடுப்பதற்க்கும் நான் விழைகின்றேன்! உன் காலடியில், எப்போதும் நான் இருப்பதானால்
  4. தாயே உன் காலடியில் தான் மூவுலகங்களும் ஒரே நேரத்தில் வெவ்வேறு அலைவரிசையில் இயங்குகின்றன. இதனை உன் திருவருளால் நான் உணர்ந்தேன். மூவுலகத்திலும் உன்னை போற்றி கொண்டு தான் இருக்கின்றார்கள் என்பதையும் நான் உன்னால் உணர்ந்தேன்.
  5. மகான்கள், ஞானிகள், ரிஷிகள் எதனை இறையாக தன்னிடத்தில் உணர்கின்றனரோ, அது உன்னை சுற்றி எங்கும் வியாபித்துள்ளது. அதனால் தான் நானும், கள் குடித்த மாந்தரை போன்று உன்னை சுற்றி கொண்டிருக்கிறேன், தாயே!
  6. உனக்கும் எனக்கும் எவ்விடத்தில் சம்பந்தம் உண்டாயிற்று? நான் பிச்சைக்காரனாய் உன் சன்னிதானத்தில் நின்ற போதா? அல்லது அதற்கும் முன் நிர்வானியாய் காசியில் கங்கை கரையில் மௌனத்தில் ஆழ்ந்திருந்த போதா..? சொல் என்னவளே காமாட்சியே !!
  7. ஆதியும் அந்தமும் அற்ற, பகலும் இரவும் அற்ற, பிறப்பும் இறப்பும் அற்ற சுத்த சூன்‌ய வெளியில் சுழன்று கொண்டிருக்கும் என் காமாட்சியே! உன் குழந்தைகளாகிய எங்களையும் அவ்விடத்திற்க்கு அழைத்து செல்க!!
  8. காதல் என்ற பாற்கவர்ச்சியில் மூழ்கும் வீணர்களே!! ஒரு முறை நீங்கள் என் காமாட்சியின் கண்களை காணுங்கள். தேன் குடித்து மயங்கி கிடக்கும் வண்டை போல அவள் காலடியில் வீழ்ந்து கிடப்பீர்கள் !! என்னைப் போல!!