- உனக்கு (இருதயத்திற்க்கு) எப்போதும் உண்மையாக இரு!
- உனது மனதின் சகல குணாதிசயங்களையும் ஆராய்ந்து அறிவாயாக!
- நீ உனது மனதின் அனைத்து குப்பைகளையும் அகற்றினால் தான் உன் உண்மை நிலை வெளிப்படும்.
- உன் சுய சொரூபத்தை மாயை என்னும் அறியாமை மறைத்திருப்பதால் உன்னை நீ சாதாரண மனிதனாக நினைத்து கொண்டு இருக்கின்றாய்.
- நம்முடைய எல்லா பாவங்களையும் நம் தவாக்னியால் எரித்து சாம்பலாக்கி விடலாம்.
- கர்மக்கள் தீவிர தவ சாதனை செய்பவரை தீண்டாது!!
- தவ சாதனையே நமக்கு ஞானத்தின் நுழைவாயிலாகும் !!
- உனது மனதில் எழும் அத்தனை எண்ணங்களும் உனக்கு சொந்தமானவை அல்ல !! பின் ஏன் நாம் நமது அனைத்து எண்ணங்களுடனும் போராட வேண்டும்.
- குருநாதரின் ஆத்ம விழிப்புணர்வு சபை உங்களுக்காகவே திறக்கப்பட்டதாகும்.
- அதனை வளர வைக்க வேண்டியது உங்களின் அனைவரின் பொறுப்பாகும். சபை உங்களுக்கு என்ன செய்தது என்று கேட்பதை போல நீங்கள் சபை வளர என்ன செய்தீர்கள் என்று உங்களை கேட்டு கொள்ளுங்கள்.
- ஆத்ம விழிப்புணர்வு சபை உங்களின் தீராத பிறவி நோய்க்கு அரு மருந்தாகும். சபையை வளர்ப்போம் மேம்படுவோமாக !!